< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஈராக்கில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி 8 பேர் உயிரிழப்பு
|31 Oct 2022 6:31 AM IST
ஈராக்கில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறி 8 பேர் உயிரிழந்தனர்.
பாக்தாத்,
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அல்-பினூக் நகரில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டு இழந்து ஓடிய லாரி சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியது.
இதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. அதோடு சாலையோரம் இருந்த குடியிருப்பு கட்டிடங்களிலும் தீப்பற்றியது. இந்த கோர விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.