< Back
உலக செய்திகள்
மங்கோலியாவில் பரிதாபம்: வீடு தீ பிடித்து 7 பேர் உடல் கருகி பலி

கோப்புப்படம்

உலக செய்திகள்

மங்கோலியாவில் பரிதாபம்: வீடு தீ பிடித்து 7 பேர் உடல் கருகி பலி

தினத்தந்தி
|
27 Oct 2023 2:08 AM IST

மங்கோலியாவில் வீடு தீ பிடித்து 7 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

உலன் பாடோர்,

மங்கோலியா தலைநகர் உலன் பாடோரின் சோங்கினோகைர்கான் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் அந்த வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

கட்டுங்கடங்காமல் பற்றி எரிந்த தீயை அணைக்க வீரர்கள் போராடினர். நீண்ட இழுபறிக்கு பின்னர் தீயை அணைந்தனர். இருப்பினும் தீயில் அந்த வீடு முழுவதுமாக எரிந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குளிர் காலம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் அறையை சூடாக்க தீ மூட்டம் போட்டு வருகிறார்கள். அவ்வாறு தீ மூட்டம்போடும் முயற்சி விபரீதமாக மாறியதாக போலீசார் விசாரணையில் தெரிந்தது.

மேலும் செய்திகள்