< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் பஸ்-கார் நேருக்கு நேர் மோதி 7 பேர் பலி
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பஸ்-கார் நேருக்கு நேர் மோதி 7 பேர் பலி

தினத்தந்தி
|
2 July 2023 1:48 AM IST

பாகிஸ்தானில் பஸ்-கார் நேருக்கு நேர் மோதி 7 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணம் நவுசாரோ பெரோஸ் பகுதியில் இருந்து பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்குள்ள மோரோ நகர் அருகே சென்றபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரே வந்த கார் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் செய்திகள்