< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனாவில் கப்பல் கட்டும் தளத்தில் தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி சாவு
|15 April 2023 10:18 PM IST
சீனாவில் கப்பல் கட்டும் தளத்தில் தீ விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது அங்குள்ள வெயிலாங் கப்பல் கட்டும் தளத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயந்துபோய் அவசர அவசரமாக வெளியே ஓடினர். மேலும் இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன? என்பது இன்னும் தெரியவில்லை.