< Back
உலக செய்திகள்
தைவான் கிழக்கு கடற்கரையில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவு
உலக செய்திகள்

தைவான் கிழக்கு கடற்கரையில் திடீர் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவு

தினத்தந்தி
|
17 Sep 2022 4:28 PM GMT

தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று இரவு திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

தைபே,

தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று இரவு திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் கடலோர நகரமான டைடுங்கிற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இரண்டு டெக்டோனிக் தட்டுகளின் சந்திப்பிற்கு அருகில் தீவு அமைந்திருப்பதால் தைவானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

தைவானைப் பொருத்தவரை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இருந்தால் மட்டுமே சுனாமி எச்சரிக்கை விடப்படும். எனவே, இன்றைய நிலநடுக்கம் கடுமையானதாக இருந்தபோதிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்