< Back
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தினத்தந்தி
|
14 March 2024 12:10 PM IST

நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானதாக அந்த நாட்டின் வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கமானது கிழக்கு போலாங் மோங்கோண்டோ ரீஜென்சிக்கு தென்கிழக்கே 128 கிமீ தொலைவில் கடலுக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

270 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பரந்த தீவுக்கூட்டமான இந்தோனேசியா, பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகளின் வளைவான "ரிங் ஆப் பயர்" மீது இருப்பதன் காரணமாக அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்