< Back
உலக செய்திகள்
வங்காளதேசத்தில் பத்மா ஆற்றின் மீது 6.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்ட பாலம் இன்று திறப்பு
உலக செய்திகள்

வங்காளதேசத்தில் பத்மா ஆற்றின் மீது 6.15 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்ட பாலம் இன்று திறப்பு

தினத்தந்தி
|
25 Jun 2022 9:13 AM IST

பாலப்பணிகள் வெற்றிகரமாக முடிந்து திறக்கப்படுவதற்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தில் ஓடும் பத்மா ஆற்றின் மீது 6.15 கீ.மீ நீளம் கொண்ட பாலத்தை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சாலை, ரயில் என நான்கு வழி போக்குவரத்து வசதியுடன் கூடிய இந்த பாலத்தை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று திறந்து வைக்கிறார்.

வங்காளதேசத்தின் 19 தென்மேற்கு மாவட்டங்களை மற்ற பகுதிகளுடன் இந்த பாலம் இணைக்கிறது.இதனால் அந்நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவும் என்று கருதப்படுகிறது. வெளிநாட்டு நிதி உதவி இன்றி முற்றிலும் உள்நாட்டு நிதியளிப்புடன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

பாலப்பணிகள் வெற்றிகரமாக முடிந்து திறக்கப்படுவதற்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திட்டம் நிறைவடைந்திருப்பது பிரதமர் ஷேக் ஹசீனாவின் தொலைநோக்கு பார்வை மற்றும் துணிச்சலான முடிவைக் காட்டுகிறது என்று டாக்காவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்