< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பிலிப்பைன்சில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு..!
|1 July 2022 11:09 AM IST
பிலிப்பைன்சில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மணிலா,
வடக்கு பிலிப்பைன்சில் உள்ள ககாயன் மாகாணத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலயன் நகரில் உள்ள தலுபிரி தீவில் இருந்து தென்கிழக்கே 27 கிமீ தொலைவில் 27 கிமீ ஆழத்தில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2:40 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் முக்கிய லுசோன் தீவில் உள்ள அபாயோ, இலோகோஸ் சுர் உள்ளிட்ட அருகிலுள்ள மாகாணங்களிலும் உணரப்பட்டுள்ளது. பசிபிக்கின் "ரிங் ஆஃப் ஃபயர்" பகுதியில் பிலிப்பைன்ஸ் அமைந்திருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.