< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சீனாவில் மினிவேன் மீது டிராக்டர் மோதி 6 பேர் பலி
|30 April 2023 3:49 AM IST
சீனாவில் மினிவேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.
பீஜிங்,
வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணம் ஜியுகுவான் நகரில் உள்ள சாலையில் நேற்று ஒரு மினிவேன் சென்று கொண்டிருந்தது. ஜிண்டா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது இந்த மினிவேன் மீது டிராக்டர் ஒன்று மோதியது. இதில் மினிவேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயம் அடைந்த 12 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.