< Back
உலக செய்திகள்
நேபாளத்தில் சாலை விபத்தில் 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் பலி
உலக செய்திகள்

நேபாளத்தில் சாலை விபத்தில் 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் பலி

தினத்தந்தி
|
24 Aug 2023 1:26 PM IST

நேபாளத்தின் பாரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

காத்மண்டு,

நேபாளத்தின் பாரா மாவட்டத்தல் நடந்த சாலை விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்மாண்டுவில் இருந்து ஜனக்பூருக்குச் சென்று கொண்டிருந்த பஸ், இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்றபோது, பாராவில் உள்ள சூரியாமை அருகே விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட மொத்தம் 27 பேர் பஸ்சில் இருந்தனர்.

இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்த இந்தியர்களின் உடல் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்து உள்ளது.

மேலும் செய்திகள்