< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து எரிந்து 7 பேர் கருகி உயிரிழப்பு
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து எரிந்து 7 பேர் கருகி உயிரிழப்பு

தினத்தந்தி
|
10 July 2023 3:09 AM IST

பாகிஸ்தானில் வேன் தீப்பிடித்து எரிந்ததில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணம் சர்கோதா பகுதியில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் வேனில் பயணம் செய்தனர். பால்வால் நகர் அருகே சென்றபோது அந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் வேனில் இருந்தவர்கள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனையடுத்து தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

எனினும் இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வேனில் பொருத்தப்பட்டு இருந்த கியாஸ் சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

மேலும் செய்திகள்