< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வாஷிங்டனில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலி; 3 பேர் காயம்
|17 July 2023 12:53 PM IST
வாஷிங்டனில் இரண்டு கார்கள் மோதிய விபத்தில் 6 பேர் பலியாகினர். 3 பேர் காயம் அடைந்துள்ளனர்.
வாஷிங்டன்,
அமெரிக்கா டகோமாவில் இருந்து 'எஸ்ஆர் 509' நெடுஞ்சாலையில் வெள்ளைநிற எஸ்யுவி ரக கார் ஒன்று வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது இந்த கார் சாலையைக் கடக்க முயன்ற வேறொரு காரின்மீது பயங்கரமாக மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் பலமுறை உருண்டு சாலை ஓரம் சென்று நின்றது.
5 பேர் பயணிக்கக்கூடிய அந்த உருண்டோடிய காரில் 7 பேர் பயணித்துள்ளனர். அதில் 6 பேர் பரிதாபமாகப் பலியாகினர். மற்றொருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எஸ்யூவி காரில் இருந்த 2 பேர் நலமுடன் உள்ளனர்.
இருப்பினும் விபத்திற்கான சரியான காரணம் தெரியவில்லை. இதனை கண்டறியப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் விபத்தின் போது பயணிகள் சீட் பெல்ட் அணிந்திருந்தார்களா? என்பதைக் கண்டறியும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.