< Back
உலக செய்திகள்
தஜிகிஸ்தான், சீனா எல்லையில் தொடர்ந்து 6 முறை நிலநடுக்கம் - மக்கள் பீதி
உலக செய்திகள்

தஜிகிஸ்தான், சீனா எல்லையில் தொடர்ந்து 6 முறை நிலநடுக்கம் - மக்கள் பீதி

தினத்தந்தி
|
23 Feb 2023 9:59 AM IST

தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

தஜிகிஸ்தானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

முதல் நிலநடுக்கம் 6.8 ஆக பதிவான நிலையில், 2வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியுள்ளது.

தொடர்ந்து, 3வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானது. 4வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9ஆக பதிவு. 5வது நிலநடுக்கம் தஜிகிஸ்தான்- சீன எல்லை சின்ஜியாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.8ஆக பதிவாகியுள்ளது. 6வது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 5.0, 4.6, 4.9, 4.8 மற்றும் 4.7 ரிக்டர் அளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்