< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
|30 Dec 2023 3:01 PM IST
இன்று காலை 10.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்த்தா,
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.
சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடலோர பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு தஞ்சம் அடைந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுக்கவில்லை.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி சுமத்ரா தீவில் நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது . இந்த நிலநடுக்கத்தால் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் சுனாமி அலை ஏற்பட்டது. இதில் இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.