< Back
உலக செய்திகள்
தங்கச்சுரங்கம் அமைந்துள்ள கிராமத்தில் நிலச்சரிவு - 54 பேர் பலி
உலக செய்திகள்

தங்கச்சுரங்கம் அமைந்துள்ள கிராமத்தில் நிலச்சரிவு - 54 பேர் பலி

தினத்தந்தி
|
11 Feb 2024 9:39 PM IST

தங்கச்சுரங்க ஊழியர்கள் பணியை முடித்து வீடு திரும்ப பஸ்களில் காத்திருந்தனர்.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டின் டவடி டு இரியொ மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் மசரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தங்கச்சுரங்கம் உள்ளது. அந்த சுரங்கத்தில் பலர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மசரா கிராமத்தை சுற்றிய மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கடந்த செவ்வாய்கிழமை மசரா கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

தங்கச்சுரங்க ஊழியர்கள் பணியை முடித்து வீடு திரும்ப 2 பஸ்களில் காத்திருந்தபோது இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் தங்கச்சுரங்க ஊழியர்கள், கிராம மக்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 32 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால், இந்த சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்தனர். மேலும், 63 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இதையடுத்து மாயமானவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மண்ணுக்குள் புதைந்தவர்களில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்