< Back
உலக செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுதலை - 3 பேருக்கு சிறை தண்டனை விதித்த இலங்கை கோர்ட்டு
உலக செய்திகள்

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுதலை - 3 பேருக்கு சிறை தண்டனை விதித்த இலங்கை கோர்ட்டு

தினத்தந்தி
|
5 Sept 2024 3:54 PM IST

முதல் முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த 5 பேரை இலங்கை கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.

கொழும்பு,

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர், கடந்த 27-ந்தேதி கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவர்களை கைதுசெய்தனர். மேலும், அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 8 மீனவர்களின் வழக்கு இன்று இலங்கை மன்னார் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, முதல் முறையாக எல்லை தாண்டி மீன் பிடித்த 5 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், 5 பேரும் இலங்கை மதிப்பில் தலா ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

எஞ்சியுள்ள 3 பேர் 2-வது முறையாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், அவர்களுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும், இலங்கை மதிப்பில் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தும் இலங்கை கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மேலும் செய்திகள்