< Back
உலக செய்திகள்
ஜப்பானில் தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் பலி
உலக செய்திகள்

ஜப்பானில் தடை செய்யப்பட்ட மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் பலி

தினத்தந்தி
|
30 March 2024 8:02 AM IST

பெனிகோஜி கொலஸ்ட் ஹெல்ப் உள்ளிட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது.

டோக்கியோ,

ஜப்பானின் ஒசாகா நகரை தலைமையிடமாக கொண்டு கோபயாஷி பார்மாசூட்டிகல் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் பெனிகோஜி கொலஸ்ட் ஹெல்ப் உள்ளிட்ட கொலஸ்ட்ரால் குறைக்கும் மருந்துகளை தயாரித்து விற்பனை செய்கிறது. அதன்படி கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 18 ஆயிரம் கிலோ பெனிகோஜி மருந்துகள் உற்பத்தி செய்துள்ளன.

இதற்கிடையே இந்த நிறுவனத்தின் மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 22-ந்தேதி இந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு அரசாங்கம் தடை விதித்தது. எனினும் கடந்த ஒரு வாரத்தில் பெனிகோஜி மருந்துகளை சாப்பிட்ட 5 பேர் இறந்துள்ளனர். மேலும் 100 பேர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் செய்திகள்