< Back
உலக செய்திகள்
டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 கோடீஸ்வரர்களும் உயிரிழப்பு...!
உலக செய்திகள்

டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற 5 கோடீஸ்வரர்களும் உயிரிழப்பு...!

தினத்தந்தி
|
23 Jun 2023 11:45 AM IST

டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்வையிடச் சென்று காணாமல் போன 5 கோடீஸ்வரர்களும் உயிரிழந்தனர்.

லண்டன்

டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்றபோது, 5 கோடீஸ்வரர்களுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் இருப்புக்காக வரையறுக்கப்பட்டிருந்த 96 மணி நேரக்கெடு கடந்துவிட்டது. நீர்மூழ்கியில் இங்கிலாந்து தொழிலதிபர் ஹமீஷ் ஹார்டிங், ஓஷன்கேட் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டாக்டன் ரஷ், நீர்மூழ்கி மாலுமியும் பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் கமாண்டோவுமான பால்-ஹென்றி நார்கியோலே, பாகிஸ்தான் தொழிலதிபர் ஷசாதா தாவூத், அவரது மகன் சுலைமான் தாவூத் ஆகிய 5 பேர் இருந்தனர்.

ஏற்கனவே மின்சாரம் தீர்ந்ததால் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்றும் கருவிகள் செயலிழந்திருக்கக்கூடிய நிலையில், இனி நீர்மூழ்கியில் கார்பன் அளவு அதிகரித்து அதில் பயணிப்பவர்கள் ஆழ்ந்த மயக்க நிலைக்கு சென்று உயிரிழக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்து கடலுக்கடியில் மாயமான அந்த நீர்மூழ்கியை அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு கடலோர காவல்படையினர் 4 நாட்களாக இரவு பகலாகத் தேடிவருகின்றனர்.

அதிலிருந்த பாகிஸ்தானிய தொழிலதிபர், அவரது மகன் உள்ளிட்ட 5 பேரும் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. அவர்களது உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்