< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
இத்தாலியில் ரெயில் மோதி பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 5 ஊழியர்கள் உயிரிழப்பு
|2 Sept 2023 3:54 AM IST
விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரோம்,
இத்தாலி நாட்டின் பிராண்டிசோ நகரில் உள்ள ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதில் சுமார் 10 ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழித்தடம் வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு ரெயில் ஒன்று அங்கு வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது.
இதில் 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் ரெயில் டிரைவர் தவறு செய்தாரா? அல்லது தொழில்நுட்பகோளாறால் விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.