< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
நேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து - 5 பேர் பலி
|30 Oct 2022 7:29 PM IST
நேபாளத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
காத்மாண்டு,
நேபாளத்தின் உள்ள நவல்பர்சாய் மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் காயமடைந்தனர்.
பல்பா மாவட்டத்தில் உள்ள ஹங்கியில் இருந்து கோர்கா மாவட்டத்தில் உள்ள மனகமானா கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து இன்று அதிகாலை 3 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு நாராயணி சமூக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.