< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
உக்ரைனில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலில் 5 பேர் பலி, 27 பேர் காயம்
|15 Jan 2023 12:11 AM IST
உக்ரைனில் குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
கீவ்,
உக்ரைன் -ரஷியா இடையிலான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், ரஷியா தனது தக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. அதற்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில், கிழக்கு உக்ரைன் நகரமான டினிப்ரோவில் சனிக்கிழமை குடியிருப்பு கட்டிடத்தின் மீது நடந்த தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 27 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆறு குழந்தைகள் உட்பட 27 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.