< Back
உலக செய்திகள்
துருக்கியில் இறுதி ஊர்வலத்துக்குள் லாரி புகுந்து 5 பேர் பலி
உலக செய்திகள்

துருக்கியில் இறுதி ஊர்வலத்துக்குள் லாரி புகுந்து 5 பேர் பலி

தினத்தந்தி
|
10 Sept 2023 1:29 AM IST

துருக்கியில் இறுதி ஊர்வலத்துக்குள் லாரி புகுந்து 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்கிழக்கு துருக்கியின் கஹ்ராமன்மாராஸ்-ஆண்டிரின் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் இறுதி ஊர்வலமும் நடைபெற்றது. இந்தநிலையில் லாரியின் பிரேக் திடீரென செயலிழந்தது. இதனால் முன்னால் சென்ற கார் மீது மோதிய லாரி பின்னர் இறுதி ஊர்வலம் சென்ற கூட்டத்துக்குள் புகுந்தது. எனவே அதில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த விபத்தில் 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 25 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்