< Back
உலக செய்திகள்
உகாண்டாவின் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

கோப்புப்படம்

உலக செய்திகள்

உகாண்டாவின் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

தினத்தந்தி
|
15 Jan 2023 10:38 PM GMT

உகாண்டாவின் எல்லையில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.

கம்பாலா,

உகாண்டாவின் எல்லையில் கிழக்கு காங்கோ நகரமான காசிண்டியில் உள்ள தேவாலயத்தில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்றும், 15 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் அந்தோணி முஅலுஷாய் கூறுகையில், "இந்த சம்பவம் நேச நாட்டு ஜனநாயக படைகளால் (ADF) நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம். ஏடிஎப் என்பது உகாண்டா போராளிக் குழு ஆகும். பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தபோதிலும், இந்த வெடிகுண்டுத் தாக்குதலின் பின்னணியில் ஏடிஎப்தான் இருக்கிறது என்பதை முதல் அறிகுறிகள் காட்டுகின்றன" என்று அவர் கூறினார்.

இருந்தபோதும் இந்த தாக்குதலுக்கு ஏடிஎப் (ADF) பொறுப்பேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்