< Back
உலக செய்திகள்
எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி கோர விபத்து - 48 பேர் பலி
உலக செய்திகள்

எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி கோர விபத்து - 48 பேர் பலி

தினத்தந்தி
|
9 Sept 2024 1:41 AM IST

எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய கோர விபத்தில் 48 பேர் உயிரிழந்தனர்.

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் நைஜர் மாகாணம் அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரி சென்றுகொண்டிருந்தது.

அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு லாரி எரிபொருள் ஏற்றிச்சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 2 லாரிகளும் வெடித்து சிதறின. இச்சம்பவத்தில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர், போலீசார் சம்பவ இடத்திற்கு படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்