< Back
உலக செய்திகள்
4 படகுகளை விடுவிக்க ரூ.4.50 லட்சம் .. யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்
உலக செய்திகள்

4 படகுகளை விடுவிக்க ரூ.4.50 லட்சம் .. யாழ்ப்பாணம் நீதிமன்ற உத்தரவால் அதிர்ச்சியில் தமிழக மீனவர்கள்

தினத்தந்தி
|
4 March 2023 10:10 AM IST

இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4 படகுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கரை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பராமரிப்பு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.

கொழும்பு,

இலங்கை எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பறிமுதல் செய்யப்பட்ட நான்கு படகுகளை, உரிமையாளரிடம் ஒப்படைக்க யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

வழக்கு விசாரணையின்போது, இலங்கை கடற்பரப்பில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டதற்காக, 4 படகுகளுக்கும் சேர்த்து சுமார் நான்கரை லட்ச ரூபாய்க்கும் அதிகமாக பராமரிப்பு செலுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறி உள்ளது.

இதனை எதிர்த்து படகின் உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்றும், அதே சமயம் வழக்கு முடியும் வரை படகுகள் விடுவிக்கப்படாது என்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்