< Back
உலக செய்திகள்
44 லட்சம் யூடியூப் சேனல்கள் நீக்கம் - யூடியூப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!

கோப்புப்படம்: AFP 

உலக செய்திகள்

44 லட்சம் யூடியூப் சேனல்கள் நீக்கம் - யூடியூப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு..!

தினத்தந்தி
|
1 Jun 2022 8:38 PM IST

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 44 லட்சம் யூடியூப் சேனல்களை தடை செய்துள்ளதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.

கலிபோர்னியா,

பரிசுத் திட்டங்களை தொடர்ச்சியாக அறிவிக்கும் ஸ்பேம் ரக வீடியோக்கள் பின்னூட்டங்களில் பொய் விளம்பரங்களை செயல்படுத்தும் ஸ்பேம்கள் ஆகியவற்றை யூடியூப் விதிமுறைகள் அனுமதிப்பதில்லை.

அந்த வகையில் யூடியூப் நிறுவனத்தின் சமூக விதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் 44 லட்சம் யூடியூப் சேனல்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள சமூக வழிகாட்டுமுறைகள் அமலாக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் 3 மாதங்களுக்குள்ளாக 38 லட்சம் வீடியோக்களை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது. இவற்றில் 91 சதவீத வீடியோக்கள் யூடியூப் நிறுவனத்தின் மென்பொருள்கள் மூலம் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த 3 மாதங்களில் 94.3 கோடி ஸ்பேம் ரக பின்னூட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்