< Back
உலக செய்திகள்
சிரியாவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

கோப்புப்படம் 

உலக செய்திகள்

சிரியாவில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
10 Aug 2023 6:56 AM IST

சரமாரி குண்டுமழை பொழிவினால் அப்பகுதி போர்க்களமானது.

அங்காரா,

சிரியாவின் வடமேற்கு மாகாணங்களில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போராடி வருகிறார்கள். நவீன ஆயுதங்கள் கடத்துதல், கொடூர கொலைகளை புரிதல், அரசுக்கு எதிராக சதி திட்டம் தீட்டுதல் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

அவர்களின் நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அமைதி படையை உருவாக்கி அங்கே களம் இறக்கி உள்ளனர். இந்தநிலையில் துருக்கியை சேர்ந்த ராணுவத்தினர் அங்கு வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது பயங்கரவாதிகள் சிலர் அவர்களின் மீது திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். சுதாரித்துக் கொண்ட ராணுவத்தினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சரமாரி குண்டுமழை பொழிவினால் அப்பகுதி போர்க்களமானது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் 4 பேர் உடல் சிதறி ரத்தவெள்ளத்தில் பலியாகினர்.

மேலும் செய்திகள்