< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சினிமா தியேட்டரில் இளம்பெண்கள் மீது கத்திக்குத்து
|27 May 2024 4:19 AM IST
தப்பியோடிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம் பிரைன்ட்ரீ நகரில் சினிமா தியேட்டர் ஒன்று செயல்படுகிறது. வார விடு முறையை முன்னிட்டு இங்கு திரைப்படம் பார்ப்பதற்காக ஏராளமானோர் சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தார். இதில் 4 இளம்பெண்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து தப்பியோடிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் பிரைன்ட்ரீ பகுதியில் உள்ள ஒரு ஓட்டலிலும் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. இதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த இரு சம்பவத்திலும் அதே நபர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.