< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வியட்நாமில் கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி
|30 Sept 2023 2:56 AM IST
வியட்நாமில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு உருவானது.
ஹனோய்,
வியட்நாமின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள தன் ஹோவா, குவாங் பிங் உள்ளிட்ட சில மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
மேலும் இந்த கனமழையால் பல இடங்களில் அங்கு நிலச்சரிவு உருவானது. இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 9 பேரை மீட்பு படையினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருகிறது.