< Back
உலக செய்திகள்
Indonesia landslide
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

தினத்தந்தி
|
8 Jun 2024 10:53 AM IST

நிலச்சரிவில் மேலும் சிலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவின் நூசா தெங்கரா மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதனை தொடர்ந்து அங்குள்ள ரேவரங்கா பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்குள் சில வீடுகள் மண்ணில் புதையுண்டன. இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகினர். மேலும் சிலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்