< Back
உலக செய்திகள்
அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து - 4 பேர் பலி
உலக செய்திகள்

அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து - 4 பேர் பலி

தினத்தந்தி
|
6 Sept 2023 9:34 PM IST

எகிப்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

கெய்ரோ,

எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் ஹெடிக்யு எல்-கிய்பா என்ற மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இன்று இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் அடுக்குமாடியில் வசித்தவர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த கட்டிட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்