< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி 4 இந்தியர்கள் உயிரிழப்பு
|25 Jan 2024 8:55 AM IST
கடலில் மூழ்கி 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி,
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள பிலிப் தீவுகள் பகுதியில் கடலில் மூழ்கி 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், விடுமுறையை கொண்டாடுவதற்காக அவர்கள் ஆஸ்திரேலியா சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.