< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிசூடு; 4 பேர் பலி
|25 Aug 2023 1:02 AM IST
அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 4 பேர் பலியாகினர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபல மதுபான விடுதி ஒன்று செயல்படுகிறது. இங்கு மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிசூடு நடத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதனையடுத்து அவர் தன்னையும் துப்பாக்கியால் சுட்டு கொண்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் துப்பாக்கிசூடு நடத்தியவர் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிசூடு நடத்திய நபர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்பது தெரிய வந்தது.