< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
தென்கொரியாவில் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு
|23 Oct 2023 4:54 AM IST
தென்கொரியாவில் கடலில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
சியோல்,
தென்கொரியாவின் தலைநகர் சியோலுக்கு தெற்கே சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அங்குள்ள புவான் பகுதிக்கு அருகே சென்றபோது மற்றொரு இழுவை படகு அதன் மீது மோதியது. இதில் மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 4 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். 14 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.