பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 38 பேர் அதிரடி கைது
|பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் முழுவதும் உள்ள நகரங்களில், இந்த மாதத்தில், 449 உளவு சார்ந்த சோதனைகளை போலீசார் நடத்தி உள்ளனர்.
கராச்சி,
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என போலீசாருக்கு உளவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, அந்நாட்டின் பயங்கரவாத ஒழிப்பு துறையை (சி.டி.டி.) சேர்ந்த போலீசார் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்காக பஞ்சாப் மாகாணம் முழுவதும் உள்ள நகரங்களில், இந்த மாதத்தில், 449 உளவு சார்ந்த சோதனைகளை நடத்தி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக பயங்கரவாதிகள் 38 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் பலர் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி.) என்ற அமைப்பின் உறுப்பினர்கள், அல்-கொய்தா இயக்க உறுப்பினர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
இந்த சோதனையில், அதிக அளவிலான வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், ஆயுதங்கள், மொபைல் போன்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கரன்சி நோட்டுகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.