< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
ஜப்பானில் பெப்பர் ஸ்பிரே கண்ணில் பட்டதால் 30 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
|12 Jun 2024 1:09 AM IST
மாணவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு மாணவர் நண்பர்கள் மீது பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்தி உள்ளார்.
டோக்கியோ,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றன. பின்னர் இடைவேளையின்போது மாணவர்கள் வகுப்பறையில் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் ஒரு மாணவர் தற்செயலாக நண்பர்கள் மீது பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்தினார்.
இதனால் கண் எரிச்சல் ஏற்பட்டு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அலறி துடித்தனர். இதனையடுத்து அந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.