< Back
உலக செய்திகள்
மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது - 3 வீரர்கள் உயிரிழப்பு

கோப்புப்படம்

உலக செய்திகள்

மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது - 3 வீரர்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
3 Oct 2022 2:38 AM IST

மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டின் கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, தென்கிழக்கு மாகாணமான தபாஸ்கோவில் கவுதமலா நாட்டு எல்லைக்கு அருகே வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. ஹெலிகாப்டரில் விமானிகள் உள்பட கடற்படை வீரர்கள் 5 பேர் இருந்தனர்.

இந்த ஹெலிகாப்டர் தபாஸ்கோவில் உள்ள சென்ட்லா நகருக்கு அருகே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். எனினும் அதற்குள் இந்த கோர விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த மற்ற 2 வீரர்களையும் மீட்பு குழுவினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் இதுபற்றி விரிவான விசாரணை நடத்த மெக்சிகோ கடற்படை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்