< Back
உலக செய்திகள்
இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 3 பேர் பலி

கோப்புப்படம் 

உலக செய்திகள்

இஸ்ரேல் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 3 பேர் பலி

தினத்தந்தி
|
16 Oct 2022 4:20 AM IST

இஸ்ரேல் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இஸ்ரேல்,

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குகரை பகுதியில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவ வீரர்களின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்துக்கு பின்னர் இஸ்ரேல் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்ற பாலஸ்தீன வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்