< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் 3 பேர் பலி
|12 Jun 2024 4:00 AM IST
வியட்நாமில் வெள்ளப்பெருக்கால் சுமார் 2,500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
ஹனோய்,
வியட்நாமின் ஹா ஜியாங் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனை தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர். இதற்கிடையே வெள்ளப்பெருக்கால் சுமார் 2,500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. எனவே அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர். மேலும் வெள்ளம் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.