< Back
உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் தங்க சுரங்கம் இடிந்து 3 பேர் பலி
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் தங்க சுரங்கம் இடிந்து 3 பேர் பலி

தினத்தந்தி
|
31 Aug 2023 5:42 AM IST

ஆப்கானிஸ்தானில் தங்க சுரங்கம் இடிந்ததில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானின் வடக்கு தகார் மாகாணத்திற்குட்பட்ட ரஸ்தாக் பகுதியில் சுரங்கம் அமைத்து தங்கத்தை வெட்டி எடுத்து வந்தனர். இந்தநிலையில் சுரங்க தொழிலாளர்கள் இந்த தங்க சுரங்கத்தில் வழக்கமான பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் சுரங்கத்திற்குள் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். சுரங்கத்திற்குள் புதையுண்ட 3 பேர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் செய்திகள்