< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலி
|18 Jun 2023 1:12 AM IST
பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாயினர்.
பிரேசிலின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டே டோ சுலில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அங்கு பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் பல நகரங்களில் அவசர நிலை உத்தரவு அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதால் சுமார் 3½ லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. இதன் காரணமாக 20 பள்ளிகளில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்த வெள்ளத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.