< Back
உலக செய்திகள்
மெக்சிகோவில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.!
உலக செய்திகள்

மெக்சிகோவில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.!

தினத்தந்தி
|
16 May 2023 8:15 AM IST

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு அதிகாரிகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

மெக்சிகோ,

மெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்புத் தெருவில் 18 வயது நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். போலீசார் வருவதற்குள் மூன்று பேர் இதில் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு அதிகாரிகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைக் சுட்டுகொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் என்பது இன்னும் தெரியவில்லை என்று கூறிய போலீசார், அவர் யார் என்றும், ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டவரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் இந்த ஆண்டு 215க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்