< Back
உலக செய்திகள்
இலங்கையில் கனமழை, நிலச்சரிவு; 3 பேர் பலி

கோப்புப்படம்

உலக செய்திகள்

இலங்கையில் கனமழை, நிலச்சரிவு; 3 பேர் பலி

தினத்தந்தி
|
17 Oct 2022 12:23 AM IST

இலங்கையில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகினர்.

கொழும்பு,

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் 6 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதுடன், ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.

இந்த மழை வெள்ளத்தால் 55 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்த நாட்டு பேரிடர் மேலாண்மை ைமயம் தெரிவித்து இருக்கிறது. ெவள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.

நாட்டில் மழை மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் வருகிற 19-ந்தேதி வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் மத்தியில் பேரதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்