அமெரிக்கா: நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் உயிரிழப்பு
|அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் வாட்சன்வில்லே நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக ஒற்றை என்ஜின் கொண்ட 'செஸ்னா 152' மற்றும் இரட்டை என்ஜின் கொண்ட 'செஸ்னா 340' ஆகிய 2 சிறிய ரக விமானங்கள் வந்து கொண்டிருந்தன.
எதிர்எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்த இந்த விமானங்கள் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது எதிர்பாராத விதமாக நடுவானில் நேருக்கு நேர் மோதின. மோதிய வேகத்தில் 2 விமானங்களும் தீப்பிடித்து எரிந்துவாறு விமான நிலையத்துக்குள் விழுந்து நொறுங்கின.
'செஸ்னா 152' விமானத்தில் ஒரு விமானியும், 'செஸ்னா 340' விமானத்தில் விமானி உள்பட 3 பேரும் இருந்ததாக கூறப்படும் நிலையில் இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.