< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்கா: நைட் கிளப்பில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி..16 பேர் காயம்
|22 July 2024 6:32 PM IST
துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை மிசிசிப்பி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நியூயார்க்,
சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. அந்தவகையில், அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
மிசிசிப்பி மாகாணத்தில் இண்டியாநோலா தேவாலய தெருவில் உள்ள நைட் கிளப்பில் நேற்று நள்ளிரவுக்கு மேல் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிளப்பின் வாசலில் பலர் நின்றிருந்தபோது அவர்கள் மீது நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் 19 வயது இளைஞர் உள்பட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குண்டடிபட்ட 16 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரை மிசிசிப்பி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.