< Back
உலக செய்திகள்
சிரியாவில் ராக்கெட் தாக்குதல்: மூன்று அமெரிக்க வீரர்கள் படுகாயம்

கோப்புப்படம் 

உலக செய்திகள்

சிரியாவில் ராக்கெட் தாக்குதல்: மூன்று அமெரிக்க வீரர்கள் படுகாயம்

தினத்தந்தி
|
25 Aug 2022 8:31 AM IST

சிரியா நாட்டில் ராக்கெட் தாக்குதல்களில் மூன்று அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

வாஷிங்டன்,

சிரியாவில் இரண்டு ராக்கெட் தாக்குதல்களில் மூன்று அமெரிக்க துருப்புக்கள் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா ஹெலிகாப்டர்களின் மூலம் பதிலடி கொடுத்ததாக அமெரிக்க மத்திய கமாண்ட்(சென்ட்காம்) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு சிரியாவில் உள்ள கொனோகோ மற்றும் கிரீன் வில்லேஜ் ஆகிய இரண்டு பகுதிகளிலும் தங்கியிருக்கும் அமெரிக்க வீரர்கள் மீது ஈரான் ஆதரவு போராளிகள் சந்தேகத்திற்குரிய பல ராக்கெட்டுகளை ஏவியதாக சென்ட்காம் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் மூன்று பயங்கரவாதிகளை அமெரிக்கப் படைகள் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்