< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் புயலுடன் கூடிய கனமழையால் இருளில் மூழ்கிய 2¾ லட்சம் வீடுகள்
உலக செய்திகள்

அமெரிக்காவில் புயலுடன் கூடிய கனமழையால் இருளில் மூழ்கிய 2¾ லட்சம் வீடுகள்

தினத்தந்தி
|
1 July 2023 10:20 PM IST

அமெரிக்காவில் புயலுடன் கூடிய கனமழையால் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின.

அமெரிக்காவின் பல பகுதிகளில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள இண்டியானா, இல்லினாய்ஸ், டென்னசி மற்றும் ஜார்ஜியா ஆகிய மாகாணங்களில் கடுமையான புயல் வீசியது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய இந்த புயலால் அங்கு ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. மேலும் பல வீடுகளுக்கும் சேதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அமெரிக்காவில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. சில பகுதிகளில் அடுத்த வாரம் வரை இதே நிலை தொடரும் என கூறப்படுகிறது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்