< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சோமாலியாவில் குண்டு வெடித்து 27 சிறுவர்கள் பரிதாப சாவு
|10 Jun 2023 11:32 PM IST
சோமாலியாவில் குண்டு வெடித்து 27 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெற்கு சோமாலியாவின் கோரியோலி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள் உள்பட பலர் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு கிடந்த மர்மப்பொருளை சிறுவர்கள் கையில் எடுத்து பார்த்தனர். ஆனால் அந்த பொருள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த கோர சம்பவத்தில் 27 சிறுவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மர்மப்பொருள் கடந்த காலங்களில் உள்நாட்டு போரின்போது வீசப்பட்ட வெடிகுண்டு என தெரிய வந்துள்ளது.