< Back
உலக செய்திகள்
பிரேசில் யூடியூபர் மர்ம மரணம்.. பக்கத்து வீட்டின் கொல்லைப்புறத்தில் சடலமாக மீட்பு
உலக செய்திகள்

பிரேசில் யூடியூபர் மர்ம மரணம்.. பக்கத்து வீட்டின் கொல்லைப்புறத்தில் சடலமாக மீட்பு

தினத்தந்தி
|
3 Jan 2024 5:56 PM IST

ரேனன் ஜோஸ், அவரது மனைவி கரோலின் இருவரும் சேர்ந்து யூடியூபரை கொலை செய்து புதைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிரேசில் நாட்டின் பிரபல யூடியூபர் கார்லஸ் ஹென்றிக் மெடிரோஸ் (வயது 26) கிறிஸ்துமஸ் தினத்தன்று காணாமல் போனார். நண்பர்களின் வீட்டிற்கு இரவு விருந்துக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை. நண்பர்களிடம் விசாரித்தபோது அவர் ஏற்கனவே வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மெடிரோசின் குடும்பத்தினர் சனிக்கிழமை வரை மருத்துவமனைகள் மற்றும் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தேடினார்கள். அதன்பின்னர், அருகில் உள்ள ஒரு வீட்டின் பின்பகுதியில் மண் மேடு இருப்பதை பார்த்த சிலர் சந்தேகமடைந்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது ஒரு டி-ஷர்ட் வெளியே தெரிந்துள்ளது. இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் வந்து அந்த இடத்தை தோண்டியபோது, காணாமல் போன யூடியூபரின் சடலம் மீட்கப்பட்டது. இதனால் அந்த வீட்டில் வசிக்கும் ரேனன் ஜோஸ், அவரது மனைவி கரோலின் மெல்லோ இருவரும் சேர்ந்து யூடியூபரை கொலை செய்து புதைத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வீட்டில் வசிக்கும் கணவன்-மனைவி இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, யூடியூபர் மெடிரோஸ் அதிக அளவில் போதை மருந்து உட்கொண்டு கரோலின் மெல்லோவின் சகோதரியுடன் உடலுறவு கொள்ளும்போது உயிரிழந்ததாகவும், பயந்துபோய் உடலை புதைத்ததாகவும் கூறி உள்ளனர். ஆனால் இந்த வாக்குமூலத்தை மெடிரோசின் குடும்பத்தினர் ஏற்கவில்லை.

மெடிரோசின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே இது கொலையா? அல்லது போதை மருந்தால் ஏற்பட்ட மரணமா? என்பது தெரியவரும்.

மேலும் செய்திகள்