< Back
மாநில செய்திகள்
தமிழக  மீனவர்கள் 25 பேருக்கு நீதிமன்றக் காவல்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 25 பேருக்கு நீதிமன்றக் காவல்

தினத்தந்தி
|
10 Dec 2023 6:54 PM IST

தமிழக மீனவர்கள் 25 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மீனவர்கள் 25 பேருக்கும் வருகிற 22-ந்தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்